For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் மெதுவாய் திரும்பும் இயல்பு வாழ்க்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Children who lost their parents

சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழக கரையோரப் பகுதிகளில் ஒரு வாரத்துக்குப் பின் மிக மெதுவான இயல்பு வாழ்க்கை திரும்பஆரம்பித்திருக்கிறது. ஆனால், மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகப்பட்டிணம் மாவட்டத்தில் இன்னும் மீட்புப் பணிகள்முடிவடையவில்லை.

கடல் அலைகளின் தாக்குதலால் கிராமங்களை விட்டு வெளியேறிய மக்கள் இப்போது இடிந்து கிடக்கும் தங்களது வீடுகளுக்கும் அடியோடுஅழிந்துபோன தங்கள் கிராமங்களுக்கும் திரும்ப ஆரம்பித்துள்ளனர். இதனால் முகாம்களில் மக்கள் கூட்டம் குறைய ஆரம்பித்துவிட்டது.

நாகப்பட்டிணத்தில் உள்ள 93 முகாம்களில் போதிய உணவு, தண்ணீர் வழங்கப்படவில்லை. இதனால் பலர் வெறுத்துப் போய் முகாம்களைவிட்டு வெளியேறியுள்ளனர்.

தமிழகம் பாண்டிச்சேரியில் 12,000 பேர் வரை பலியாகியுள்ளனர். இதில் நாகப்பட்டிணத்தில் தான் அதிகபட்சமான உயிரிழப்புக்கள்ஏற்பட்டுள்ளன. அங்கு பலியோனர் எண்ணிக்கை 5,000க்கும் அதிகம்.

அடுத்தபடியாக கன்னியாகுமரியும் கடலூர் மாவட்டங்களும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன.

இந்த மாவட்டங்களில் பல இடங்களில் கடலோர மீனவ கிராமங்கள் இருந்த சுவடே தெரியாமல் அழிந்துவிட்டன. இந்த கிராமங்களைஒட்டியிருந்த பிற மக்களின் ஆயிரக்கணக்கான காங்க்ரீட் வீடுகளும் இடிந்து போயிருக்கின்றன.

சுமார் 350 கிராமங்களைச் சேர்ந்த 5 லட்சம் பேர் வீடுகளை இழந்துவிட்டதாக ஆரம்ப கட்ட கணக்கில் தெரியவந்துள்ளது. இவர்களுக்காகநூற்றுக்கணக்கான முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் 80 சதவீதத்தினர் மீனவர்கள்தான்.

ஆயிரக்கணக்கான படகுகள், விசைப் படகுகள், வலைகள், மீன்பிடி சாதனங்களை இழந்துவிட்டு நிர்கதியாக நிற்கின்றனர் இந்த மக்கள்.தமிழகக் கடலோரங்களில் வாழ்க்கையே தொலைந்துவிட்டது.

நாகப்பட்டிணத்தில் மட்டும் சுமார் 1,200 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் 2,000 குழந்தைகள்ஆதரவற்றவர்களாகிவிட்டனர்.

இந் நிலையில் முகாம்களை விட்டு மக்கள் மெதுவாக தங்களது பகுதிகளுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர். மீண்டும் சுனாமி தாக்கும்அபாயம் இப்போதைக்கு இல்லை என்று நம்பிக்கை தரப்படுவதால் இவர்கள் முன்பு தாங்கள் வாழ்ந்த பகுதிகளுக்கு வர ஆரம்பித்துள்ளனர்.

இடிந்து கிடக்கும் வீடுகளில் ஏதாவது எஞ்சியிருக்கிறதா என்று சேகரிக்க ஆரம்பித்திருக்கும் இந்த மக்களில் சிலர் குடிசைகளை மீண்டும்கட்டவும் தொடங்கியுள்ளனர்.

தாங்க இருந்த வீட்டின் இடத்தை விட்டுவிட்டால் அங்கு வேறு யாராவது குடிசை போட்டுவிடுவார்கள், ஆக்கிரமித்துவிடுவார்கள் என்றஅச்சமும் மக்களிடம் பரவியுள்ளது. இதனால் முகாம்களில் குழந்தைகள், பெண்களை விட்டுவிட்டு ஆண்கள் அதிக அளவில் வெளியேறஆரம்பித்துள்ளனர்.

மீண்டும் குடிசைளைக் கட்ட அரசு உடனடியாக ரூ. 4,000 உதவி வழங்கி வருகிறது. இந்த நிதியைக் கொண்டு தங்கள் வீடுகளை மீண்டும்கட்டத் தொடங்கியுள்ளனர் இந்த மக்கள்.

ஆனால், இந்தத் தொகை பல இடங்களில் முறையாக வந்து சேரவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. குறிப்பாக நாகப்பட்டிணத்தில்குறைகள் மிகவும் உரக்கவே கேட்கின்றன. நாகையில் நேற்று கூட 600 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் இந்த மாட்டத்தில்உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,500 ஆகிவிட்டது. மேலும் பல உடல்கள் புதைந்து கிடப்பதால் இறந்தோர் எண்ணிக்கை 6,000த்தைத்தொடக் கூடும்.

ஆனால், பிற மாவட்டங்களில் உடல்கள் மீட்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இப் பகுதிகளில் இடிந்து போன கான்ங்க்ரீட் வீடுகளின்உரிமையாளர்கள் ராணுவம், தீயணைப்புப் படையினரின் உதவியுடன் இடிபாடுகளை அகற்றிக் கொண்டிருக்கின்றனர்.

பல கிராமங்களில் டாக்டர்கள் குழு முகாமிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் திரும்பியவர்களுக்கு உணவு, தண்ணீர்தட்டுப்பாடில்லாமல் கிடைக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்களில் உணவு, உடைகள், மருந்துகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குதொடர்ந்து அனுப்பப்பட்ட வண்ணம் உள்ளது.

இதனால் இந்த மக்கள் உணவுக்கு சிரமப்படவில்லை என்பது மிக மகிழ்ச்சியான விஷயம். பல இடங்களில் உணவு ஏராளமான அளவில்குவிந்து வருவதால் அது கெட்டுப் போய் வருகிறது.

மேலும் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் மக்கள் அனுப்பும் பழைய உடைகளை பயன்படுத்த முன் வரவில்லை. இதனால்அவையும் ஒரு பக்கம் குவிந்து கிடக்கின்றன.

இதனால் பழைய உடைகளையும் விரைவில் அழுகும் பழங்கள் போன்ற உணவுப் பொருட்களையும் அனுப்ப வேண்டாம் என மக்களுக்குமாவட்ட கலெக்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி விரும்புவோர் மெழுகு வர்த்திகள், மண்ணெண்ணெய் ஸ்டவ், மண்ணெண்ணெய், பாத்திரங்கள், அரிசி,பருப்பு, பல சரக்கு, டீத் தூள், பால், சர்க்கரை, குழந்தைகளுக்கான உணவு, பிளாஸ்டிக் ஷீட்டுகள், நிதியுதவி ஆகியவற்றை வழங்குமாறுகேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

நிவாரணப் பணிகளில் ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையிலான குழுக்கள் ஈடுபட்டுள்ளன. மேலும் நிவாரணப் பொருட்களை வாங்கி,வினியோகிக்க ஆங்காங்கே குடவுன்களும் தொடங்கப்பட்டுள்ளன.

நாகப்பட்டிணத்தில் பாதிக்கப்பட்ட குடிநீர் குளங்களை மைக்ரோ ஆர்கானிஸம்ஸ் என்ப்படும் நுண்ணியிரிகளைக் கொண்டு சுத்தப்படுத்ததிட்டமிடப்பட்டுள்ளது. இந்த நன்மை செய்யும் நுண்ணியிரிகள் நீரில் கலந்துவிட்ட பிணங்களின் உடல் பகுதிகள் மற்றும் கழிவைத் திண்றுநீரை சுத்தம் செய்யும் திறன் மிக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X