For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூர்: கர்நாடகத்தில் கடும் பாதிப்பில் தமிழ் சினிமா

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

கர்நாடகத்தில் தடையை மீறி பிற மொழிப் படங்களை திரையிடும் தியேட்டர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்என்று நடிகர் ராஜ்குமாரின் மனைவி பார்வதம்மா ராஜ்குமார் கர்நாடக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

கன்னடம் அல்லாத பிறமொழிப் படங்களை 7 வாரங்களுக்குப் பிறகே கர்நாடகத்தில் திரையிட வேண்டும் என்றகன்னடத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க உத்தரவை மீறி, பெங்களூர் மாரத்தஹள்ளியில் உள்ளஇன்னொவேட்டிவ் மல்டிபிளெக்ஸ் திரையரங்கு, ஐஸ்வர்யா ராய் நடித்த புதிய இந்திப் படம் மற்றும் ஒரு ஆங்கிலப்படத்தைத் திரையிட்டிருந்தது.

இதையடுத்து கன்னட பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தவர்கள், இந்த திரையரங்கு மீது தாக்குதல் நடத்தினர்.திரையரங்க கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இதில் திரையரங்கு உரிமையாளர் அனுராதா, பணியாளர்கள்சிலர் இந்தத் தாக்குதலில் காயமடைந்தனர்.

இதை புகைப்படம் எடுத்த பத்திரிக்கைப் புகைப்படக்காரர்கள், தொலைக்காட்சி வீடியோகிராபர்கள் ஆகியோரும்காயமடைந்தனர்.

இந் நிலையில், பார்வதம்மா ராஜ்குமார் பெங்களூரில் நடந்த ஒரு விழாவில் பேசுகையில்,

கன்னட படங்களின் நலனைக் கருத்தில் கொண்டுதான் அரசு அமைத்த உயர் மட்டக்குழு மற்ற மொழிபடங்களுக்கு ஏழு வார தடை விதித்தது. தடையை மீறி பிற மொழிப் படங்களை வெளியிடும் தியேட்டர்கள் மீதுஉயர் மட்டக்குழு கூட்டத்தை உடனடியாகக் கூட்டி தண்டனை வழங்க வேண்டும் என்று கூறினார்.

இதற்கிடையே பிற மொழிப் படங்களை தடையை மீறி திரையிட்டால் திரையரங்குகளைத் தாக்குவோம் என்றுகன்னட பாதுகாப்பு அமைப்பின் தலைவர் நாராயண கெளட எச்சரித்துள்ளார்.

பெங்களூரில் இதுகுறித்து அவர் கூறுகையில், 7 வாரங்களுக்குப் பிறகுதான் புதிய பிற மொழிப் படங்களைதிரையிட வேண்டும். இந்தத் தடையை அனைத்துத் திரையரங்குகளும் ஒழுங்காக பின்பற்ற வேண்டும். இதை மீறிநடக்கும் திரையரங்குகள் மீது நாங்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம். எங்களை யாரும் தடுக்க முடியாதுஎன்றார்.

மேலும் 3 திரையரங்குகள் மீது தாக்குதல்:

இதற்கிடையே இன்று மேலும் 3 தியேட்டர்கள் தாக்கப்பட்டன. தூம் என்ற இந்திப் படத்தை திரையிட்டிருந்தகாவேரி, அபிநய், ஊர்வசி ஆகிய திரையரங்குகள் மீது கன்னட பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்குதல்நடத்தினர். தியேட்டரின் திரைகள் கிழிக்கப்பட்டன. இச் சம்பவம் தொடர்பாக சுமார் 40 பேர் கைதுசெய்யப்பட்டனர். இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ஊர்வசி திரையரங்கில் இருந்து இந்தப் படத்தின் படச் சுருளை வேறு ஒரு திரையரங்குக்கு ஊர்வசி திரையரங்கஊழியர்கள் இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றனர்.

அப்போது ஒரு கும்பல் அவர்களை வழிமறித்து படச் சுருளை பறித்துத் தீவைத்தது.

இந் நிலையில் இந்தப் பிரச்சினை தொடர்பாக வரும் 16ம் தேதி இந்திய திரைப்பட வர்த்தக சபை. தென்னிந்தியதிரைப்பட வர்த்தக சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கன்னட திரைப்பட வர்த்தக சபைத் தலைவர்கெங்கராஜூ கூறினார்.

பாதிக்கப்பட்ட தமிழ்ப் படங்கள்:

கர்நாடகத்தில் படத்தை ரிலீஸ் செய்ய முடியாததால் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் பெரும் பாதிப்புக்குஉள்ளாகியுள்ளனர். பெங்களூரில் தமிழ் படத்தை ரிலீஸ் செய்வதால் மட்டும் ரூ. 30 லட்சம் வரை ஈட்டி வந்தனர்தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள்.

ஆனால், தமிழ்ப் படங்களை ரிலீஸ் செய்ய 7 வார தடை விதிக்கப்பட்டுள்ளதால், புதிய படங்களை வாங்கதியேட்டர்கள் தயாராக இல்லை.

கன்னட அமைப்புகளின் மிரட்டல் காரணமாக 7 வாரம் ஆன தமிழ்ப் படத்தைக் கூட பல தியேட்டர்கள் ரிலீஸ்செய்ய முன் வரவில்லை. இதனால் தமிழ் சினிமா ரிலீஸ் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. சில தியேட்டர்கள்மட்டுமே துணிச்சலாக தமிழ்ப் படங்ளை வெளியிட்டுள்ளன. ஆனால், கன்னட அமைப்பினரின் தாக்குதல் பயம்காரணமாக மக்கள் தியேட்டர்களுக்கு வருவது குறைந்து போயுள்ளது.

இதே நிலை தான் பிற மொழி சினிமாவுக்கும் ஏற்பட்டுள்ளது. மற்ற மொழி சினிமாவை விட தமிழ் சினிமாவைரிலீஸ் செய்ய முடியாததால் தான் தங்களுக்கு அதிகபட்ச நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தியேட்டர் உரிமையாளர்கள்கூறுகின்றனர்.

கன்னடத் திரையுலகினரின் இந்த தொடர் போக்கைக் கண்டித்து இதுவரை தெலுங்கு, இந்தி மற்றும் தமிழ்த்திரையுலகைச் சேர்ந்தவர்கள் உறுதியான, இறுதியான முடிவு எதையும் எடுக்கவில்லை. வெறும் கண்டனத்தீர்மானங்களோடு அவர்களது "ரியாக்ஷன்" உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக தமிழ் சினிமாவின் முன்னணிக் கலைஞர்களில் கமல்ஹாசனைத் தவிர மற்றவர்கள் யாரும் கர்நாடகத்தின்தடை குறித்து வாயே திறக்கவில்லை. கமல்ஹாசன் கூட பெங்களூருக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தபோதுநிருபர்களை சந்திக்க நேர்ந்ததால் இந்த விவகாரம் குறித்து பேசினார். இல்லாவிட்டால் அவரும் அமைதியாகஇருந்திருப்பார்.

ஆனால், ரஜினி இதுவரை சுத்தமாக வாயே திறக்கவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X