For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜீவஜோதி கடத்தல் வழக்கில் அண்ணாச்சிக்கு 3 வருடம் கடுங்காவல் தண்டனை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Jeeva Jyothiநேற்று ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனைவிதிக்கப்பட்ட சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு, ஜீவஜோதி கடத்தல் வழக்கில் இன்று 3 வருடகடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ. 10,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கொலை வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையுடன் இதையும் சேர்த்து ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றுநீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம் ராஜகோபால் 10 ஆண்டுகளை சிறையில் கழிக்க வேண்டும் என நீதிபதிஅறிவித்தார்.

தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு:

இந் நிலையில் கொலை வழக்கில் தனக்கு அளிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து இன்று சென்னைஉயர் நீதிமன்றத்தில் ராஜகோபால் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

கடந்த 2001ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஜீவஜோதியின் வீட்டுக்கு அடியாட்களுடன் சென்ற ராஜகோபால்,அவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை அடித்து உதைத்தார். ஜீவஜோதியை தனக்குத் திருமணம் செய்துகொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொள்ளுமாறு சாந்தகுமாரை மிரட்டினார்.

Thavamani Jeeva Jyothis motherஇதற்கு சாந்தகுமார் ஒப்புக் கொள்ள மறுத்ததால் அவரை ராஜகோபாலின் ஆட்கள் கடத்திச் சென்றனர். பின்னர்அவர் கொலை செய்யப்பட்டார்.

அதே தினத்தன்று ஜீவஜோதியை ராஜகோபால் தனது காரில் திருநெல்வேலிக்குக் கடத்திச் சென்றார். அங்குஜோதிடர் ஒருவரை சந்திக்க வைத்த ராஜகோபால் ஜீவஜோதியை திருமணம் செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது.

பின்னர் ஒரு வழியாக ஜீவஜோதியை ராஜகோபால் விடுவிக்க, அவர் சென்னை போலீசாரிடம் நவம்பர் 18ம் தேதி,நடந்த அனைத்து சம்பவங்கள் குறித்தும் புகார் கொடுத்தார்.

பிரின்ஸ் கொலை வழக்கும் ஜீவஜோதி கடத்தப்பட்ட வழக்கும் பூந்தமல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில்விசாரிக்கப்பட்டு வந்தது. நேற்று கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகடுங்காவல் தண்டனை தரப்பட்டது. ரூ. 50 லடசம் அபராதத்தையும் ஜீவஜோதியிடம் வழங்க உத்தரவிட்டதுநீதிமன்றம்.

Raja Gopalகடத்தல் வழக்கில் 3 வருடம்:

இந் நிலையில் இன்று ஜீவஜோதி கடத்தல் வழக்கில் தீர்ப்பை வழங்கினார் நீதிபதி செல்வகுமார்.

நீதிபதி கூறுகையில், ஜீவஜோதியை 3வது திருமணம் செய்து கொள்ளலாம் என்ற நோக்கத்தில் அவரையும்கணவரையும் ராஜகோபால் கடத்திச் சென்றுள்ளார். இந்த வழக்கில் ராஜகோபாலுக்கு 3 ஆண்டு கடுங்காவல்தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதிக்கிறேன்.

பிரின்ஸ் கொலை வழக்கில் விதிக்கப்பட்ட பத்தாண்டு தண்டனையுடன் இதையும் சேர்த்து ஏக காலத்தில்ராஜகோபால் அனுபவிக்க வேண்டும்.

கடத்தலுக்கு உதவிய ராஜகோபாலின் ஆட்களான தமிழ்ச்செல்வன், டேனியல், ஜனார்தனன், பாலு, சேது, காசி,கார்மேகம், ஜாகிர் கான் ஆகிய 8 பேருக்கும் இரண்டாண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.5,000 அபராதமும்விதிக்கிறேன்.

ஸ்டீபன், ராஜேந்திரன், ஜெயக்குமார், தட்சிணாமூர்த்தி, சந்திர குமார் ஆகியோர் மீது குற்றங்கள்நிரூபிக்கப்படவில்லை. இதனால் அந்த 5 பேரையும் விடுவிக்கிறேன் என்றார் நீதிபதி.

Prince Santhakumarஇதற்கிடையே இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜகோபால் தரப்பில் ஒரு மேல் முறையீட்டு மனு தாக்கல்செய்யப்பட்டது. அதில்,

பிரின்ஸ் கொலை வழக்கில் எனக்கு சம்பந்தமே இல்லை. நான் நிரபராதி, இதனால் எனக்கு விதிக்கப்பட்ட 10ஆண்டு கடுங்காவல் தண்டனையை ரத்து செய்து என்னை விடுவிக்க வேண்டும். தண்டனையை நிறுத்தி வைத்துஉடனே என்னை ஜாமீனில் விட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி ஏ.கே. ராஜன் முன்னிலையில் நாளை விசாரணைக்கு வருகிறது.

ஜீவஜோதி மகிழ்ச்சி:

இதற்கிடையே தனது கணவர் பிரின்ஸ் கொலை வழக்கில் ராஜகோபாலுக்கு 10 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், சிரமப்பட்டு போராடியதில் நியாயம்கிடைத்திருப்பதாகவும் ஜீவஜோதி கூறியுள்ளார்.

தஞ்சையில் இருக்கும் அவர் கூறுகையில், தீர்ப்பை அறிந்தவுடன் தஞ்சை பெரியகோவிலுக்குப்போய் பூஜை செய்துவிட்டு வந்தேன். தண்டனையை எதிர்த்து ராஜகோபால் மேல் முறையீடுசெய்தால் அதையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன் என்றார்.

தஞ்சாவூரில் இப்போது ஜீவஜோதிக்குப் பாதுகாப்பு தந்து வருவது போயஸ் தோட்டத்துக்குநெருக்கமான மன்னார்குடி குடும்பத்தைச் சேர்ந்த மகா ஒருவர் தான் என்கிறார்கள் விவரம்தெரிந்தவர்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X