செய்திகள்    புக்மார்க்ஸ்    இலக்கியம்    ஜோதிடம்    சினிமா    சமையல்    ஆன்மீகம்    ஆசிரியர் பக்கம்    கேலரி    வீடியோ    கோப்புகள்    Font Help
 தமிழகம்    இந்தியா    உலகம்    இலங்கை    விளையாட்டு    வர்த்தகம்
முதல் பக்கம் » செய்திகள் » முழு விபரம்

சென்னைக்கு திருப்பிவிடப்பட்ட விமானங்கள்
ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 10, 2001  
RSS thatsTamil RSS feed thatsTamil  iGoogle gadgets Free SMS Alerts in Tamil இலவச நியூஸ் லெட்டர் பெற  thatsTamil Bookmarks
    

சென்னை:

கொழும்பு பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தில் விடுதலைப் புலிகளுக்கும்- ராணுவத்தினருக்கும் இடையே கடும்சண்டை நடந்து வருவதால், செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் அங்கு எந்த விமானத்தையும் இறக்கவோ அல்லதுவிமானத்தை அனுப்பவோ முடியவில்லை.

இதையடுத்து கொழும்பு வந்த விமானங்கள் அனைத்தும் இந்திய விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.

சிட்னியில், ரியாத், மிலன், துபாய் ஆகிய இடங்களில் இருந்து கொழும்பு வந்த விமானங்கள் சென்னைக்கு திருப்பிவிடப்பட்டன.அவை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டன.

இந்த விமானங்கள் மூலம் 1005 பயணிகள் சென்னை வந்திறங்கினர். சென்னை வந்திறங்கிய விமானங்களில் ஒன்று இலங்கைஏர்லைன்சுக்கு சொந்தமானது.

அதே போல லண்டனில் இருந்து கொழும்பு வந்த விமானம் துபாய்க்கு திருப்பிவிடப்பட்டுள்ளது. இன்னொரு விமானம் கேரளமாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்துக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது.

சென்னை, திருவனந்தபுரம் வந்திறங்கிய இந்தப் பயணிகளிடம் இந்தியாவுக்குள் நுழைவதற்கு விசா இல்லை. இதனால், இந்தவிமானங்கள் அவசரமாக இந்தியாவில் தரையிறங்கியதாகக் கருதப்பட்டு, பயணிகளின் பாஸ்போர்ட்டுகள் விமான நிலையஅதிகாரிகளால் வாங்கிக் கொண்டனர்.

இந்தப் பயணிகளை இலங்கைத் தூதரக அதிகாரிகள் ஹோட்டல்களில் தங்க வைக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். பயணிகள்குழுக் குழுவாக ஹோட்டல்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இவர்கள் எப்போது இலங்கை திரும்ப முடியும் என்று தெரியவில்லை. விமான நிலையத்தில் புலிகள்-ராணுவம் சண்டை இன்னும்தொடர்ந்து நடந்து வருகிறது.


 வாசகர் கருத்து
[ கருத்தை பதிவு செய்யுங்கள் ]


செய்திகள்


பயாஸ்கோப்
Opinion Poll

Is India cheated by Bush on nuclear deal?
Yes
No
PM knew the conditions
No Comments
    

Results | Previous Results

Recommended Links
     SMS Updates      Astrology      Chat      RSS      Post Free Classifieds      Online Shopping & Auctions      Jobs      Explore India